One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

January 10, 2007

திருவிளையாடல் Vs திருவிளையாடல்.

ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பில் மீண்டும் படங்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. உதாரணம்: பார்த்திபன் கனவு, திருவிளையாடல் etc., நல்ல வேளை அலிபாபாவும் 40 திருடர்களும், மணாளனே மங்கையின் பாக்கியம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் தப்பித்து விட்டன.

இப்படி அதே பெயர்களுடன் வந்த படங்களுக்குள் உள்ள ஒற்றுமை/வித்தியாசங்களை பற்றி யோசித்த பொழுது தான் அந்த உண்மையை உணர்ந்தேன். உண்மை என்னவென்றால், அப்படி சொல்லும் படி எந்த ஒற்றுமையொ, வித்தியாசங்களோ இல்லை. இருந்தாலும் ஒரு சின்ன அலசல். Sivaji-யின் திருவிளையாடல் Vs Dhanush-ன் திருவிளையாடல் (பழைய என்ற வார்த்தை வேண்டாமே).

Comedy

Sivaji-யின் திருவிளையாடல்:

இன்றும் மறக்க முடியாத நாகேஷின் comedy. என்ன ஒரு body language and dialogue delivery.

Danush-ன் திருவிளையாடல்:

பக்கத்து தெரு பெண் பெரிய மனுஷி ஆனதை, இந்த தெரு வாலிபர்கள் பிரியானி வினியோகம் செய்து கொண்டாடுவதும், அதற்காக உரிமை பறிபோன கோபத்தோடு சண்டை போட வரும் அந்த தெரு இளைஞர்கள். (ஆண்டவா!!! 100 துடிப்பான இளைஞர்களை கேட்ட விவேகானந்தர் இன்று தான் இறந்தார்)

வீணாகிய திறமைகள்

Sivaji-யின் திருவிளையாடல்:

அப்படி ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ஆனாலும் முத்துராமனுக்கு அவ்வளவு பெரிய scope இல்லையோ என்று ஒரு உறுத்தல்.

Danush-ன் திருவிளையாடல்:

மெளலி. எப்பேர்பட்ட இயக்குனர், வசனகர்த்தா மற்றும் நடிகர். 4 வசனங்கள் கேட்டாலே எழுதியது மெளலியோ என்று யோசிக்க வைக்கும் தனித்துவம் வாய்ந்தவர். அவரா இவர்???

எதிர்பார்த்த காட்சிகள்

Sivaji-யின் திருவிளையாடல்:

பாணபத்திரரை காக்க சிவன் வருவது. However, எதிர்பாராதது - அவ்வளவு அற்புதமான பாடல் (பாட்டும் நானே பாவமும் நானே...)

Danush-ன் திருவிளையாடல்:

ஏலக்காட்சியில் நிலத்தை அதிக விலைக்கு பிரகாஷ்ராஜ் வாங்குவது. (ஆண்டவா இன்னும் எவ்வளவு காலத்துக்கோ).

எதிர்பாராதது-

1. அந்த நிலம் தனுஷின் அப்பாவுடையது.
2. அவ்வளவு 'பெரிய' தொழிலதிபர், நிலத்தின் மதிப்பை அறியாமல் ஏலத்துக்கு வருவது. (ஏமாற்றம்)

Heroism

Sivaji-யின் திருவிளையாடல்:

Sivaji-க்கு தேவைபடவில்லை.

Danush-ன் திருவிளையாடல்:

Income-tax raid scene-ல் தனுஷ் பேசும் வசனங்கள். ஏன் தனுஷ் இன்னும் புதுப்பேட்டை படத்துக்கு போட்ட வேஷத்தை கலைக்கவில்லை???

Re-Mix

Sivaji-யின் திருவிளையாடல்:

அவசியப்படவில்லை. (இசையமைப்பாளர் திரு. K.V.மகாதேவன் என்பதால்)

Danush-ன் திருவிளையாடல்:

சமீப காலத்தில் வெளிவந்த re-mix உடன் ஒப்பிட்டால் சுமார் தான்.
ஒப்பிடுக:
1. என் ஆசை மைதிலியே... - மன்மதன்.
2.என்னடி முனியம்மா ... - வாத்தியார்.

3 comments:

Prabhu said...
This comment has been removed by a blog administrator.
~~மணி~~ said...

ok, sure. thanks da.

Siva Sivaaa said...

ஓய் அண்ணாத்தே!! திருட்டு VCD கீதா??