One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

September 25, 2008

எச்ச வினை

காக்கைகள் தின்னுமென வைத்த பிண்டம்..

எறும்புகள் சிறிது தின்று விட்டால் என்ன நோகும்?

வந்து தானே செல்கிறாய்;

ஏன் வெந்து போகிறாய்?

காண்பதில் கொள்வாய் நீ மயக்கம்;

வாழ்வதற்கு மட்டும் என்ன தயக்கம்?

February 14, 2008

My Rendezvous with life


This was an adventure I got into inadvertently and today, am so glad I did.It was a long weekend for me. With an intention to persuade my folks to come on an unplanned holiday with me, I threatened them that I would go alone if they didn’t come. Surprise….surprise….surprise….they let me go alone.So I ended up in Pondy, one afternoon after a three hour lone journey in the bus from Chennai. After a late lunch, I started hunting for the hotel rooms, only to find out that the whole world was celebrating their long weekend in Pondy L. After a series of unsuccessful check ins, in a number of hotels in person and over phone, spent a couple of hours brooding over my predicament in the beach.After a small stroll and a little prayer, went in to check with the park guest house, despite the ‘House Full’ board outside and the watchman’s discouragement. The reception confirmed these statements and said there is no room available. Sad and dejected, I was walking back to the door; suddenly the guy in the reception called me back and asked me what the purpose of my visit was. I said ‘Holiday’. He stared at me for a second and said “I have a room at the back and it costs and Rs.100/day” (I thought I was dreaming!!!!)Checked in and was jumping out of joy. It was a Sunday, so went out to window shop in the Sunday Mal and a few hours in the beach and a few more in the moonlight in the guesthouse’s park overlooking the beach and what a bliss it was!!! Life just couldn’t have been better.The next day I with the aid of a map, which I could read very little, (John Gray was quite right about women not being able to read maps) and a hired vehicle which I was able to manage better. Visited the Ashram and the famous Ganesh temple early in the morning and had a good darshan. With some guidance and misguidance, my first stop was at chunnamar beach club. Here I got to spend an hour in the paradise island in the beach, playing in the water, sand, swing and taking photos. It was a nice boat ride and had become quite well versed in taking my own photos with my camera. I also spoke to strangers for a few long shots. (Women travelling alone… be cautious who you strike a conversation with… Let it be a woman, couple, family or worst a respectable elderly man.)Had lunch with a couple of friendly strangers. Back to room. And then to Auro beach in the evening. Spent some more time in the same set of activities. After handing over bike, went around to shop and for a walk in a park opposite to Raj Bhavan. Couldn’t go to Auroville as it was a government holiday and was closed. Tired and happy I went to bed early, listening to the beautiful rain outside.D day. Like all good things come to end, this was a day to pack up and leave. After a sumptuous breakfast in a beachside table in the guest house, packed up and left for a park for a photo session and then to Auroville to visit the matri mandir in an auto.Heading home after a heavy lunch and with a heavier but happier heart. What a holiday it had been?

January 17, 2008

திரைவிமர்சனம் - பீமா




ஒரு பெரிய வணக்கம்.
நீண்ட நாட்களாக வெளிவரும் என்று நினைத்த என்னுடைய பதிவும், பீமா படமும், கடைசியில் வந்தே விட்டன.
இந்த படத்திற்க்கு சென்சார் போர்ட் A – Certificate வழங்கி இருப்பது, மிகவும் உன்னதமான விஷயம். காரணம் த்ரிஷாவோ அல்லது படம் முழுவதும் நிறைந்து இருக்கும் வன்முறைகளோ இல்லை. ஒரு தாதாவை பார்த்து, அவரை ரோல் மாடலாக நினைத்து, வளர்ந்து பின் அவரிடமே சென்று சேரும் ஒருவனின் கதை. கண்டிப்பாக சிருவர்களுக்கு தப்பானா வழிகாட்டி.

அடுத்ததாக,
படத்தில் ரகுவரன், ப்ரகாஷ்ராஜ், விக்ரம், த்ரிஷா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி என Powerful கூட்டம். ஆனால் ப்ரகாஷ்ராஜ் தவிர யாருமே, (ஆமாம், யாருமே) நடித்ததாக தெரியவில்லை. ப்ரகாஷ்ராஜிர்க்கு கூட, பழகிப் போன ரோல், பழகிப் போன வசனங்கள் (யாரு டா நீ..). சத்ய கொடுமை.

உல்லாசம் படத்தில் அஜித் செய்த ரோல் தான் பீமா விக்ரமுக்கு. விக்ரம் இந்த படத்திற்காக தன் உடலை மிகவும் கட்டுமஸ்த்தாக வைத்துள்ளார், அதற்க்கு என் முதல் பாராட்டுக்கள். ஆனால் அதற்க்காக, படம் முழுவதும் எல்லாரையும் அடித்து கொண்டோ, சுட்டுக்கொண்டோ இருக்கிறார்.

த்ரிஷா, இன்னும் எத்தனை காலத்துக்கு தான் கதாநாயகன், கதாநாயகியை, தெரியாமல் கட்டிப்பிடித்து உருளுவதும், அந்த ஒரே காரணத்தால் காதல் மலர்வதும்... திருந்தவே மாட்டார்களா...
படம் முழுவதும், த்ரிஷா விக்ரமை துரத்துகிறார், பின் விலகுகிறார், அப்புறம் விக்ரம் த்ரிஷவை துரத்துகிறார், இதன் காரணமாக 4 பாடல்கள். தன் அழகை வெளிப்படுத்துவதில் காட்டி இருக்கும் அக்கரையய், நடிப்பதிலும் காட்டி இருக்கலாம். மற்ற படங்களை விட கவர்ச்சி கொஞ்சம் தூக்கல் தான். Action படம் என்பதர்காக படம் முழுவதும் கொஞ்சம் கூட Comedy இல்லை. படம் முடியும் போது வரும் வேதனை சிரிப்பை தவிர.

பாராட்டுவதற்க்கு ஒன்றுமே இல்லை என சொல்ல முடியாது. அவ்வப்போது நிகழும் ஆச்சரிய, எதிர் பாராத நிகழ்வுகள் மற்றும் படத்தின் முடிவு. Very Good லிங்குசாமி. சில பாடல்கள் கேட்க இனிமை, சில பார்க்க இனிமை (கண்டிப்பாக த்ரிஷாவினால் தான்)
Not to be left விக்ரம் த்ரிஷா வின் chemistry.

என்னுடய Favorite Area - ஒளிப்பதிவு. கொஞ்சம் சுமார் தான். மின்னலே, காக்க காக்க, கஜினி எடுத்தவர் தானே நீங்கள்? என்ன ஆயிட்ரு சார்?

"இந்த படம் சமுதாயத்துக்கு என்ன பாடம் சொல்கிறது என்றால்..." என்பதை எல்லாம் விட்டு விட்டு சாதரணமாக படத்தை பார்த்தால், இது ஒரு சுமாரான Action Movie.

November 06, 2007

Iyyo aandava...

This is a piece of relaxation sponsored by a tele-caller. Due to factors like absence of my counter-part, month-end, etc., I was busy in office to the core. At that time I received a call from an MNC bank's tele-caller and she was trying to pitch sales for a credit card. (I already have a bad experience about credit card.) The conversation follows:

T.C. - Hello, this is S from D bank and we are offering...(blah blah)
Me - No I'm not interested.
T.C. - Sir, we are from corporate division and we are offering credit card for your company employees with blah blah... offers. I've contacted many people in your company and they all applied for me.
Me - (WAT)
T.C. - hmm Mr. R from P dept, Mr. S from A dept, all applied for me only. You know Mr. X from E dept, you can ask him about my processing.
Me - (My god)
T.C. - Which department you are in sir?
Me - C Department
T.C. - hmmm in your dept, Mr. V (my boss) also applied for me sir; and Mr N (my boss's boss) also applied for me sir
Me - Now I started laughing silently.
T.C. - you can also apply for me sir,
Me - hmmm... May be in weekend (she did not understand, why I said so)
T.C. - shall I come and collect concerned documents at home sir.
Me - What are those concerned documents?
T.C. - blah... blah...
Me - I'm available only after 8.30 pm.
T.C. - No problem sir, i'll come to your home and I'll apply. (wat is she gonna apply to me)

It went on for another 10 minutes and I said I'm busy now and asked her to call after 3 hours, ofcourse to relax. Then I came to know that she is not a Tele-caller but some territory officer. iyyo aandava...

August 20, 2007

இப்படி இருந்தா எப்படி...

I would like to share my recent experience with regard to the irresposibility level of a renown university in TamilNadu.

I went to this university's chennai office to get one application form and prospectus.

He gave me a sheet of paper in which there were columns for application number, name and phone number (there was another column too, but i dont remember).

I wrote the application number which was in a series and other details too and gave Rs.500 (the cost of the prospectus is Rs. 100).

He checked the number written in the paper and the the one in prospectus he gave me and WROTE THE APPLICATION NUMBER IN THE WHITE PORTION OF THE RS. 500 NOTE.

I was shocked to see this. As RBI (Central bank of India) has announced that no citizen should write anything on the curreny and doing so is an offence. This announcement is advertised in every bank in India.

Uneducated/illitrate people writing phone numbers on currency note are excusable (though, it is still an offence), but goverment offices and Universities not following this rule is the height of irresponsibility.

His reply was funniest(?!) when I told him that writing anything on Indian Currency is an offence. He said that they follow this procedure to track down the person who gave this currency note (through the application number and the name and phone number written in the sheet) in the event that the note is a fake one. GOD!!!!

He didn't have any answers when I said, such a university could use a machine (with UV rays) to identify the fake notes then and there also explained (in vain) that there are several other ways published by the RBI to identify fake currencies.

What I like is his innocence to believe that the person giving a fake note would give his correct contact number.

பல்கலைகழகங்கள் தான் நாட்டில் அறிவு விளக்கை ஏற்ற வெண்டியவர்கள். ஐய்யா... நீங்களே இப்படி இருந்தா எப்படி...

July 23, 2007

மழை இரவின் கடைசி துளிகள்
















மழை, வரம் எனக்கு.
அது கேட்காமல் எனக்கு கொடுத்ததெல்லாம் புன்னகை மட்டும் தான்.

மழையை எப்போதும் நான் இயல்பாக பார்த்ததில்லை.
நான் அதை ரசித்திருந்த அனைத்து கணங்களிலும் பல வண்ணப் படங்களின் கலவை இருந்தது.

அண்ணாந்து மழை வாங்கிய இரு சக்கர பயணங்களும்,
தொப்பலாக கரைந்த நடு ரோட்டு நடைகளும்,
ஏதோ ஒரு கதாநாயகனின் காட்சி தொடர்ச்சியாகவே இருந்திருக்கிறது.

மழையை எப்பொது நான் நானாக ரசித்திருந்தேன்?

திரைப்படங்கள் என் கண்களுக்குள் கலக்காத என் பிஞ்சு காலத்தில் அது நிகழ்ந்திருக்கலாம்.
அந்த பதிவுகள் எல்லாம் முன்னெப்போதோ பெய்த மழையால் கழுவப்பட்டிருந்தது.

வேண்டுமானால் அது இன்று தான் நடந்தது என்று சொல்லலாம்.
குறிப்பாக சொன்னால் அதுவும் இன்றைய மழை நின்ற பிறகு தான்!

என் நினைவுகள் இவ்வாறு விரிந்து விழைந்தது.
மழை குளிப்பாட்டிய கண்ணாடி கதவுகள்;
ஒர் நிசப்த இரவு;
அரை இருட்டில் தெரியும் திறந்த சன்னல்கள்;
அதில் சொட்டும் மழையின் கடைசி துளிகள்;
ஒரு தேநீர் கோப்பை;
கடைசியாக இந்த கவிதையின் தலைப்பு.

இப்போது மெதுவாக அரும்புகிறது என் பால்ய கால நினைவுகள்,
நான் எட்டி பிடித்து இழுக்கும் மரக்கிளையில் தொங்கும் மழை துளிகள் தொட்டவுடன் என் உடலெல்லாம் சிலிர்த்து விடும்.

அந்த ரசனை என்னுடையதாக இருக்கலாம்,
யாரும் எந்த திரைப்படத்திலும் முயற்சிக்காமல் இருந்திருந்தால் அல்லது
நான் யாரிடமிருந்தோ தொடர்ந்திருக்காமல் இருந்தால்.

மழை பெய்யும் பொழுதை விட நின்ற பிறகு தான் அழகாக இருக்கிறது.
நான் அதன் கடைசி துளிகளின் காதலன்.

July 19, 2007

சிவாஜி - தி பாஸ்

"ர-ஜி-னி என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு மூன்றெழுத்து மந்திரம்" என்று பாலகுமாரன் ஒரு முறை எழுதி இருந்தார். அது எந்த அளவு உண்மை என்பதை இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் தெரியும். ரஜினி நின்றால், நடந்தால், திரும்பினால், சிரித்தால் என எதற்கும் ஆரவாரம், விசில்.

அன்றிலிருந்து இன்று வரை, சில விஷயங்களை, ரஜினி செய்தால் தான் எடுபடும், ஒத்துக்கொள்ள முடியும். வேறு யார் செய்தாலும், "பெரிய ரஜினினு நெனப்பு", என்று தோன்றும் அளவுக்கு, he is been branded, obliging those rules, இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்.

படம் முழுவதும் ரஜினி. சில இடங்களில் நடுவில் ரஜினி, அவரை சுற்றி சங்கர். (காவிரி ஆறும்... மற்றும் சகானா... பாடல்களில்)

புதுமுகங்கள்: பட்டிமன்றம் ராஜா மற்றும் சாலமன் பாப்பய்யா. பழகலாம் வாங்க காமெடி தாங்க முடியவில்லை.

ரகுவரனுக்கு ஏன் இந்த நிலைமை. புது முகங்களை விட குறைந்த வசனம், மொத்தமே 15 நிமிடம் கூட பார்க்க முடியாது அவரை படத்தில்

சிரேயா: அழகு தேவதை, gorgeous... ஜீன்ஸ் படத்துக்கு பிறகு சங்கரின் சிறந்த (அழகில், உடை அலங்காரத்தில், ஒப்பனையில்...) கதாநாயகி.

தோட்டா தரணி: சகானா பாடல் செட்டில், சங்கரின் தேவையை சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார். எங்க சார் புடிச்சீங்க அந்த பியானோவை.

பாடல்கள்: 2 அல்லது 3 பாடல்கள் தவிர மீதி பாடல்களில் கொஞ்சம் சத்தம் அதிகம். (மீண்டும்) சகானா காதுக்கு இனிமை.

ஒளிப்பதிவு: நம்ம கே. வீ. ஆனந்த். பின்னி விட்டார் போங்கள்.

சங்கர் இந்த படம் வருவதர்க்கு முன், இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி படமாகவும், சங்கர் ரசிகர்களுக்கு சங்கர் படமாகவும், இவர்களின் சேர்க்கை எப்படி இருக்கும் என்று வருபவர்களுக்கு தீனியாகவும் இருக்கும் என்று கூறினார்.

அந்த மட்டிலும் உண்மை.

ஒன்றரை வருட உழைப்பு, மூன்று முறை ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு, இவ்வளவும் இந்த வெற்றிக்காக தான்.