ஆரஞ்சு ஒளி மைல்காட்டியில்
25,000 கி.மீ. பார்த்ததுமே பரவசமடைகிறேன் நான்...
தொடு கைபேசியெடுத்து புகைப்படம் எடுக்கிறேன்...
முகநூலில் பகிர்கிறேன்...
நண்பர்கள் கை உயர்த்தும் பொத்தானை அழுத்துகிறார்கள்...
“You are high on Road ;)” விமர்சிக்கிறாள் பணித்தோழி...
சுதாரித்து விழித்தபோது
மைல்காட்டியது 25,000.3 கி.மீ....
~
புன்னகைத்து தலை நிமிர்கையில்,
திடீரென நிறுத்திய ஒரு கனரக வாகனத்தை
வேகமாக விரைந்து முத்தமிடுகிறேன் நான்...
25,000.5 கி.மீ....
என் வண்டியின் இயந்திரம் பெருத்த ஓலமிடுகிறது...
~
குருதி வழிந்தோடும் ஓர் சாலையோர்த்தில்
உயிரிழந்து கிடக்கிறேன் நான்...
யாரோ ஒரு குறுந்தாடி இளைஞன்
இதை படமெடுத்து பகிர்கிறான்
“Fatal accident in OMR” என்று!!!
No comments:
Post a Comment