One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

July 19, 2007

சிவாஜி - தி பாஸ்

"ர-ஜி-னி என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு மூன்றெழுத்து மந்திரம்" என்று பாலகுமாரன் ஒரு முறை எழுதி இருந்தார். அது எந்த அளவு உண்மை என்பதை இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் தெரியும். ரஜினி நின்றால், நடந்தால், திரும்பினால், சிரித்தால் என எதற்கும் ஆரவாரம், விசில்.

அன்றிலிருந்து இன்று வரை, சில விஷயங்களை, ரஜினி செய்தால் தான் எடுபடும், ஒத்துக்கொள்ள முடியும். வேறு யார் செய்தாலும், "பெரிய ரஜினினு நெனப்பு", என்று தோன்றும் அளவுக்கு, he is been branded, obliging those rules, இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்.

படம் முழுவதும் ரஜினி. சில இடங்களில் நடுவில் ரஜினி, அவரை சுற்றி சங்கர். (காவிரி ஆறும்... மற்றும் சகானா... பாடல்களில்)

புதுமுகங்கள்: பட்டிமன்றம் ராஜா மற்றும் சாலமன் பாப்பய்யா. பழகலாம் வாங்க காமெடி தாங்க முடியவில்லை.

ரகுவரனுக்கு ஏன் இந்த நிலைமை. புது முகங்களை விட குறைந்த வசனம், மொத்தமே 15 நிமிடம் கூட பார்க்க முடியாது அவரை படத்தில்

சிரேயா: அழகு தேவதை, gorgeous... ஜீன்ஸ் படத்துக்கு பிறகு சங்கரின் சிறந்த (அழகில், உடை அலங்காரத்தில், ஒப்பனையில்...) கதாநாயகி.

தோட்டா தரணி: சகானா பாடல் செட்டில், சங்கரின் தேவையை சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார். எங்க சார் புடிச்சீங்க அந்த பியானோவை.

பாடல்கள்: 2 அல்லது 3 பாடல்கள் தவிர மீதி பாடல்களில் கொஞ்சம் சத்தம் அதிகம். (மீண்டும்) சகானா காதுக்கு இனிமை.

ஒளிப்பதிவு: நம்ம கே. வீ. ஆனந்த். பின்னி விட்டார் போங்கள்.

சங்கர் இந்த படம் வருவதர்க்கு முன், இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி படமாகவும், சங்கர் ரசிகர்களுக்கு சங்கர் படமாகவும், இவர்களின் சேர்க்கை எப்படி இருக்கும் என்று வருபவர்களுக்கு தீனியாகவும் இருக்கும் என்று கூறினார்.

அந்த மட்டிலும் உண்மை.

ஒன்றரை வருட உழைப்பு, மூன்று முறை ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு, இவ்வளவும் இந்த வெற்றிக்காக தான்.

2 comments:

Priya said...

rajni rajni than!!!!! but i like all the songs da. and enna oru picturisation!!!!appa!!!

~~மணி~~ said...

picturisation is really awesome. Can you believe that the "adhiradi... song was shot in our old binny mills. They painted huge walls and paintings for that. It place looks like France or some other European country.