விஷயம் என்னவென்று தெரியாதவர்களுக்கு, Indian Air force - ன் எழுபத்தி ஐந்தாவது வருட நிரைவு விழா கொண்டாட்டம், கடந்த இருபத்தி இரண்டாம் தேதி சென்னையில் நடந்தது. IAF - ன் கொண்டாட்டம் தரையிலா இருக்கும், விண்ணில் தான்.
சாயங்காலம் 5 மணிக்கு, முதல் போர் விமானம், வணக்கம் செலுத்தும் வகையில் காற்றை கிழித்து கொண்டு பறந்தது. அடுத்தது ‘சூர்யகிரன்’ (கீழே உள்ளவை) என்னும் போர் விமானங்கள் விண்ணில் அணிவகுத்து வந்தன.
அவர்களின் சில அற்புதாமான விண் விளையாட்டுக்கள்.
அடுத்ததாக, ‘ஸாரங்’ என்னும் Helicoptors. (கீழே உள்ளவை)
Helicoptor - ல் நிரைய அம்சங்கள் இருப்பது தெரியும், ஆனால் இப்படி சாகசஙள் செய்ய முடியும் என்று நினைத்ததில்லை.
கிட்டத்தட்ட நெட்டுக் குத்தாக கீழே இறங்கியது, ஒன்றன் மேல் ஒன்று மிக குரைந்த இடைவெளியில் பறந்தது, போன்றவை.
முடிவில் தேங்க்ஸ் சொல்லும் வகையிலும், தமிழ்நாடு என்பதற்காகவும், "T" வடிவில் பறந்தனர்.
சினிமாவில் போலி சாகசங்கள் செய்வதை வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்க்கிறோம், ஆனால் உண்மையான கதாநாயகர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.
2 comments:
Cool one in a rather hot sun.
Thanks for writing this.
Post a Comment