One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

April 10, 2007

மொழி-திரை விமர்சனம்

ஒரு வார்த்தையில் - WoW

நான் பார்க்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது முறையாக அந்த படத்துக்கு வந்த என் friend - க்கு நன்றி.

அமைதியான படம் என்றாலும், commercial காரணங்களுக்காக, லாஜிக்கே இல்லாத காரணங்களுடன், ஒரு சண்டை காட்சி (உ.ம். ABCD - ஷ்யாம் நடித்தது), ஆடை குரைத்து ஒரு பாடல் (உ.ம். எண்ணிலடங்காது) என படத்தை நிரப்புவது வழக்கம். அப்படி எல்லாம் இல்லாமல் கண்ணியமாக ஒரு படம் கொடுத்து இருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை சிரிப்பு மழை தான். ஆனால் இது ஒரு typical comedy movie அல்ல.

படம் முடியும் பொழுது நாம் "Sign Language" கொஞ்சம் கற்றுக் கொள்வோம். அதனால் இது ஒன்றும் documentary movie இல்லை.

அது எப்படி ஒரே படத்தில் எல்லோருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர்.

பிரகாஷ்ராஜ் – As usual, Extra-ordinary
ப்ரித்விராஜ் - இவரை நான் வில்லனாக பார்த்து இருக்கிறேன், இப்பொழுது Comedy கலந்த கதானாயகனாக பார்க்கிறேன். இப்படியும் பிடித்து இருக்கிறது.
ஜோ - முதலில் சொன்ன WoW - க்கு முக்கிய காரணம்.
ஸ்வர்னமால்யா - அளவு தெரிந்து நடித்து இருக்கிறார்.

கடைசி பாட்டு தான் கொஞ்சம் உருத்தல். வேண்டியதில்லயோ??? ஜோ தன் காதலை சொல்லும் பொழுது தலைக்கு மேலே சீரியல் பல்பு எறிவதும், தேவாலய மணி அடிப்பதும் நல்ல ரசனை.

Not to be left, வித்யாசாகரின் இசை. பிரமாதம். குறிப்பாக ஜோ அழும் காட்சியில், மற்றும் 2 பாடல்களில்.

குகன் தன் காமிராவால் ஓவியம் வரைந்து உள்ளார், அதுவும் அந்த "காற்றின் மொழியே..." பாடலில், பின்னி விட்டார் போங்கள்

மொத்தத்தில் பிரகாஷ்ராஜ்க்கு துரோகம் செய்யாமல் தியேட்டரில் பார்க்க வேண்டிய நல்ல படம்.

1 comment:

Priya said...

படத்துக்கு ஒரு வார்த்தையில் சொன்ன Comment இந்த article - க்கும் பொருந்தும்.