One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

February 10, 2007

திருக்குறள் and Cine songs

குறள்:

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.

குறள்: 1128

பொருள்:

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார். ஆகையால், சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

WoW, சினிமா என்பது என்னவொரு சக்தி வாய்ந்த ஊடகம் (புரியாதவர்களுக்கு - Medium). அதில் சொல்லும் விஷயம் தான் எவ்வளவு எளிதில் சென்றடைகிறது.

என் காதலியிடம் நான், "அடி சகியே, அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவெ இல்லயடி, மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடி" என்று கவிதை சொன்னால், உடனே அது 'அன்பே சிவம்' படப் பாடல் என்று சொல்லி விடுவாள்.

ஆனால் மேற் சொன்ன குறளோ, அதன் காதல் பொதிந்த பொருளோ, தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இந்த காதல் வரிகளை, "...Hot-box ல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்..." (படம் - தீனா, பாடல் - காதல் வெப்சைட் ஒன்று…) என்று ஆங்கிலத்துடன் பிசைந்து, லைலாவை ஆடவைத்து சொன்ன பொழுது தான் மக்களிடம் எளிதில் சென்றடைந்தது.

எப்படியோ, மிகுந்த தொலைநோக்குப் பார்வையோடு எழுதிய வள்ளுவரின் வரிகள் மக்களிடம் போய் சேர்ந்தால் சரி.

மொத்தம் 1330 குறட்பாக்கள் இருந்தாலும், திருக்குறளே மைலாபூரிலிருந்து (திருவள்ளுவர் பிறந்த ஊர்), கோடம்பாக்கத்துக்கு வந்தால் தான் நமக்கு தெரிகிறது.

1 comment:

விங் said...

தங்களது கருத்தை நான் பலமாக ஆமோதிக்கிறேன்.