One more passion of mine

Hi all, ever know that I can click any sort of cameras in earth. check my new blog. You can go there by going to my profile. - ~~மணி~~

November 16, 2006

இந்த வார திருக்குறள்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

குறள்: 788

பொருள்:
உடை நம் உடலை விட்டு நழுவும் பொழுது, நாணத்தினால், கை உடனடியாக அதை சரி செய்வதை போல், நண்பனின் கஷ்டத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இந்த காலத்தில் சுயநலம் இல்லாத நண்பராக இருப்பது மிகவும் கஷ்டம். அவரவர்க்கு அவரவர் பிரச்சனையே தலைக்கு மேல் இருக்கு. எங்கு பார்த்தாலும் cut-throat competition. இதில் நண்பருக்கு உதவ வேண்டும், அதுவும் நொடி பொழுதில் உதவ வேண்டும் என்பதெல்லாம் நடக்கிற காரியமா??

ஆம், நடக்க வேண்டும். இதற்கு ஒரு நடிகரின் வாழ்கையில் நடந்த உண்மை நிகழ்ச்சி.

இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த நடிகர், நடிகராக முயற்சி செய்து கொண்டிருந்த பொழுது நடந்தது. அவர் பெயரை நம் கதைகாக X என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவர் அறையில் அவரும் அவரின் அப்பொழுதைய காதலியும் இருந்தனர். அப்பொழுது அவர் நெருங்கிய நண்பர் ஒருவர் கவலையுடன் அவரை பார்க்க வந்தார். உள்ளே இருக்கும் பெண்ணொ நண்பருக்கு தெரிந்த பெண். அவள் உள்ளே இருக்கும் விஷயம் தெரியக் கூடாது என்று அந்தப் பெண் பதறுகிறாள். X -க்கோ இருவரும் முக்கியம். ஆனால் முடிவாக நண்பரிடம் கதவை திறக்காமலே “நான் busy யாக உள்ளேன், அப்புறம் வா” என்று கூறி விட்டார். ஒரு வினாடி X முகத்தை பார்த்து விட்டு நண்பர் சென்று விட்டார். அரை மணி நேரத்தில் X க்கு phone, அவர் நண்பர் தற்கொலை செய்து கொண்டார் என்று. ஒரு 5 நிமிடம், டீ சிகரெட்டோடு, மனம் விட்டு பேசியிருந்தால், ஒரு உயிர் மிஞ்சி இருக்கும்.

ஆகையால் நண்பனாக இருப்பது, treat வாங்குவதற்கும், சேர்ந்து தண்ணி அடிப்பதற்கும் மட்டும் அல்ல. உரிய நேரத்தில், உண்மையான நண்பனாக நடப்பதற்கும் தான்.

இந்த தொகுப்பை படித்த பிறகு, நம் நண்பர்களின் பெயர்களை எழுதிக் கொள்வோம். ஒவ்வொருவருக்கும், உண்மையாக உள்ளோமா என்று யோசிப்போம். இல்லை என்று உறைத்தால், இனியாவது இருப்போம். காலம் கடந்து அழுவதை தவிர்ப்போம்.


P.S.

இந்த நிகழ்ச்சியை அனைவருக்கும் புத்தி புகட்டும் வகையில், பெருந்தன்மையுடன் வெளியிட்ட நடிகருக்கு என் நன்றிகள்.

1 comment:

Priya said...

good one. nice example