நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
குறள்: 791
பொருள்:
நட்பு செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்பு செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.
இந்த குறளுக்கு உரிய உதாரணமாக நாம் கர்ணன் and துரியோதனனுடைய நட்பை கருதலாம். தான் மாவீரன் என்று போற்றப்பட வேண்டிய சபையில், சத்திரியன் இல்லை என்று அவமானப்பட்டு நின்றான் கர்ணன். அப்பொழுது அவ்வீரனை உடனுரைவது நன்மை தரும் என்று கருதிய துரியோதனன், கர்ணனை அங்கத நாட்டு அரசனாக்கினான். அச்சபையில் தன் மானம் காத்தவனுக்காக கடைசி வரை உடன் இருந்து உயிரையும் தந்தான் கர்ணன்.
கர்ணனுக்குத் தெரியும், அவன் எதிர்ப்பது அவன் தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று. இருந்தும் "நட்டபின் வீடில்லை நட்பு ஆள்பவர்க்கு" என்பதற்கு இணங்க தன் உயிர் பிரியும் வரை துரியோதனனுக்கு உற்ற துணைவனாகவும் உண்மையான நண்பனாகவும் இருந்தான்.
ஆகையால் நண்பனை தேர்ந்தெடுக்கும் பொழுது நமக்கும், நம் நட்பிற்கும் தீமை விளைவிக்காதவராக தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.